கைது
கைது 8 ஆண்டுகளாக புனேவில் தலைமறைவு வாழ்க்கை: சிக்கிய பாகிஸ்தான் இளைஞர்
தேசம்

8 ஆண்டுகளாக புனேவில் தலைமறைவு வாழ்க்கை: சிக்கிய பாகிஸ்தான் இளைஞர்

காமதேனு

மகாராஷ்ட்டிர மாநிலம் புனே நகரில் கடந்த 8 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்து வந்த பாகிஸ்தானியரை போலீஸார் கைது செய்துள்ளனர். பழைய புனேயின் கடக் பகுதியில் இருந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

புனே நகரில் 22 வயதான பாகிஸ்தானை சேர்ந்த முகமது அமன் அன்சாரி என்ற நபர் கடந்த 8 ஆண்டுகளாக புனேயில் வசித்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அன்சாரி கடந்த 2015-ம் ஆண்டு முதல் சுடாமன் தலீம் அருகே உள்ள பவானி பேத்தில் சட்டவிரோதமாக வசித்து வருகிறார் என தெரிவித்தார். விசாரணையில், அவர் துபாய் சென்றிருந்த போலி பாஸ்போர்ட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைதான பாகிஸ்தான் நபர் மீது ஐபிசி பிரிவுகள் 420, பிரிவு 468, பிரிவு 471, வெளிநாட்டினர் சட்டம், 1946 (14) மற்றும் பாஸ்போர்ட் சட்டம் -1967 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT