அஷ்ரப் - ஆதிக் கொலையாவதற்கு சற்று முன்பு 
தேசம்

‘ஆதிக் அகமது ரகசியங்களுக்காக அவரை கொன்றனர்’ -பாஜக போடும் குண்டு!

காமதேனு

’ஆதிக் அகமது வசமிருக்கும் தங்களது ரகசியங்கள் வெளிப்படாதிருக்க, எதிர்க்கட்சியினர் அவரை குறிவைத்து கொன்றுள்ளனர்’ என்று உத்தரபிரதேசம் மாநில பாஜக அமைச்சரான தரம்பால் சிங் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

2005இல் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் என்பவரை கொன்றது, நடப்பாண்டு பிப்ரவரியில் அவரது வழக்கறிஞர் உமேஷ் பாலை கொன்றது ஆகிய வழக்குகளில், தனது சகோதரர் முகமது அஷ்ரப் கைதானவர் ஆதிக் அகமது. கடந்த வாரம் பிரக்யாராஜில் மருத்துவமனை சென்று திரும்பும்போது, பத்திரிக்கையாளர் போர்வையில் பதுங்கியிருந்த 3 பேர் சுட்டதில் சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கொலையாளிகள் மூவரும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டதால், இந்து தீவிரவாத அமைப்பினர், ஆதிக் அகமது படுகொலையில் ஈடுபட்டதாக விவாதங்கள் எழுந்தன. ஆனால் பாஜகவினர் வேறு தரப்புகளை பரப்பி வருகின்றனர்.

மாநில விலங்குநல மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தரம்பால் என்பவர், ’எதிர்க்கட்சியினர்தான் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை திட்டமிட்டு கொன்றுள்ளனர்’ என தெரிவித்துள்ளார். “ஆதிக் அகமது கூட்டத்தின் கூட்டாளியாக இருந்து பயனடைந்த எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், தற்போது ஆதிக் கைதானதும் தங்களைப் பற்றிய ரகசியங்களை வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் கொலைத் திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT