நுங்கு வண்டி பந்தயம் 
தேசம்

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..!- அனைவரையும் கவர்ந்த சிறுவர்களின் நுங்கு வண்டி பந்தயம்

காமதேனு

காரைக்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கு நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. 

சிறுவர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் நுங்கு வண்டியும் ஒன்று. பனை மரத்திலிருந்து பனங்காய்களை வெட்டி அதில் உள்ள நுங்கை தின்றுவிட்டு பனங்காய்களை  சக்கரமாக பயன்படுத்தி நீண்ட குச்சி பயன்படுத்தி  வண்டி செய்து அவற்றை ஓட்டித் திரிவது சிறுவர்கள் வழக்கம். ஆனால் தற்போது அலைபேசி யுகத்தில் அத்தகைய விளையாட்டுகள் சுத்தமாக மறைந்து போய்விட்டன.

இந்தநிலையில் காரைக்குடி அருகில் கல்லல் ஒன்றியம் பனங்குடி பிலாச்சைம்பட்டி கிராமத்தில் இந்த விளையாட்டு நடைபெற்றது. அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான நுங்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியில் ஐந்து முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் 17 பேர் கலந்து கொண்டனர். ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடிய அவர்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் உற்சாகப்படுத்தினர். பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.  இப்படிப்பட்ட விளையாட்டுகளை பார்க்கும்போது பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வருகிறது.

SCROLL FOR NEXT