தேசம்

மண்வெட்டி, அரிவாளுக்கு ஜிஎஸ்டி கிடையாது; ஆனால் இந்த பொருட்களுக்கு உண்டு: மத்திய அரசு புதுத்தகவல்

காமதேனு

மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும் அதே நேரத்தில் சில விவசாய பொருட்களுக்கு ஜிஎஸ்டி உண்டு என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த விவசாய பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வேளாண் துறையில் கைகளாலும், விலங்குகளை கொண்டு பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி எதுவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மண்வெட்டிகள், முள் கரண்டிகள், அரிவாள்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை என்றும், அதே நேரம் கதிரடிக்கும் இயந்திரங்கள், நடவு செய்யும் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதை, தானியம், உலர்ந்த பருப்பு, காய்கறிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT