அன்பு நகர் பகுதிக்கு அழைத்து வரப்படும் கைது செய்யப்பட்டவர்கள்  
தேசம்

கோவை கார் குண்டு வெடிப்பு: கைதானவர்களிடம் 2வது நாளாக தீவிர விசாரணை

காமதேனு

கோவை கோட்டைமேடு கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக  கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இரண்டாவது நாளாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் உக்கடம் அன்பு நகர் பகுதியில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக  அக்டோபர் 23 ம் தேதியன்று கார் சிலிண்டர் குண்டு வெடித்தது. இந்த  சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரோஸ் கான், உமர் பாரூக்,  முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகிய ஐந்து பேரை மட்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை காவலர் பயிற்சி மைதானத்துக்கு  அழைத்து வந்தனர்.

நேற்று அவர்களை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதிக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று அன்பு நகர், புல்லுக்காடு ஆகிய பகுதிகளில் ஐந்து பேரையும்  நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவர்களை  21ம் தேதியில் இருந்து 29ம் தேதிவரையிலும் காவலில் எடுத்து விசாரிக்க  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கும், மற்றும் அவர்களின் வீடுகளுக்கும் அழைத்துச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT