தேசம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 கி.மீட்டருக்குள் தேர்வு மையம்: தேர்வு துறை திடீர் உத்தரவு!

காமதேனு

பொதுத் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் 10 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்துத் தேர்வு எழுதும் நிலை இருக்கக் கூடாது எனத் தேர்வுத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12- ம் வகுப்புகளுக்கான புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்த பரிந்துரைகளை வரும் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் அமைக்க அங்கீகாரம் கிடையாது. பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள், அப்பள்ளியில் அவசியம் தேர்வு மையமாக அமைத்தே தீர வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

அந்த விளக்கம் திருப்தியாக இருந்தால் மட்டுமே அப்பள்ளிக்குத் தேர்வை மையம் அமைக்க அனுமதி வழங்கப்படும். 10 கிலோ மீட்டருக்கு மேல் மாணவர்கள் பயணம் செய்து தேர்வு எழுதுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT