தேசம்

‘நானும் எனது மகனும் அண்ணன் தம்பி போல இருப்போம்’ - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

காமதேனு

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை அண்ணா நகரில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிக்காக சாலைகளில் 3 மணி நேரத்துக்கு போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூடைப்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல போட்டிகளை விளையாடிய முதல்வர் ஸ்டாலின் சைக்கிளும் ஓட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ எனக்கு கரோனா தொற்று ஏற்பட்ட போதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாததற்கு காரணம் உடற்பயிற்சிதான். எனக்கு 70 வயது ஆகிறது. ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன் - தம்பி போல இருப்போம்.

சாப்பிடும் முன்பு பசியோடு அமர வேண்டும். சாப்பிட்டு முடிக்கும்போதும் பசியுடனே எழுந்துக்கொள்ள வேண்டும். உடல்நலத்தை நல்லபடியாக பேணிக்காத்தால் கவலைகள், மன அழுத்தம், சங்கடங்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும்” என தெரிவித்தார்

SCROLL FOR NEXT