தேசம்

அடுத்த 2 வாரங்களுக்கு பருவமழை எப்படி இருக்கும்?: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

காமதேனு

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்," நவம்பர் 17 முதல் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இயல்பைவிட 91 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 16 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் மழையளவு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான 2 மாதங்களில், இயல்பைவிட 4 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT