தேசம்

வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை : காணொலி காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை

காமதேனு

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அப்போதிலிருந்தே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது வெள்ள பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்கள் எவையெவை எனவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் கேட்டறிகிறார். மேலும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT