தேசம்

எம்.ஜி.ஆர் சிலைக்கு அவமரியாதை... ஒரு மணி நேரத்திற்குள் அதிரடி காட்டிய போலீஸார்!

காமதேனு

எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபரை ஒரு மணி நேரத்தில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள மார்பளவு கொண்ட எம்.ஜி.ஆர் சிலை மீது நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள பொதுமக்கள் வண்ணாரப்பேட்டை போலீஸில் புகார் அளித்தனர். மேலும் தகவல் அறிந்து அதிமுக தொண்டர்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த லியோநார்ட்(43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட லியோநார்ட் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது எந்தவொரு வகுப்பினரின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் செயல்படுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், எந்தவொரு வழிப்பாட்டு தலத்திலோ அல்லது சமய வழிபாடுகள் மீது குற்றத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல்துறை தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன், எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபரை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபர் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவர் என்றும் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

SCROLL FOR NEXT