தேசம்

படிப்படியாக மழை குறையும், ஆனால்?: எச்சரிக்கும் வானிலை மையம்

காமதேனு

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் படிப்படியாக மழை குறையும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியதால் டெல்டா மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்தது. தற்போது தமிழக கேரள பகுதிகளைக் கடந்து மேலடுக்குச் சுழற்சியாக நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை இனிவரும் காலங்களில் படிப்படியாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு படிப்படியாக மழை குறைய வாய்ப்பு உள்ளது. வரும் 16-ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தீவிரமாவதைப் பொருத்து அதன் நிலை எப்படி இருக்கும், எந்தத் திசையை நோக்கி நகரும் என்பது தெரியவரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT