அரசு பேருந்து ஏலத்தில் முறைகேடு 
தேசம்

கோவையில் பரபரப்பு... ஓய்வுப்பெற்ற அரசு அதிகாரிக்கு 188 ஆண்டு சிறை தண்டனை... ரூ.3.32 கோடி அபராதம்!

காமதேனு

கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் 47 பேருந்துகளை ஏலம் விட்டு லட்சக்கணக்கான ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரிக்கு 188 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3.32 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் 1988ம் ஆண்டு ஓடாத நிலையில் இருந்த 55 பேருந்துகளை பழைய இரும்பு பொருட்களாக விற்பனைச் செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. இதில் 28.20 லட்சம் ரூபாய் ஏல மதிப்பு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ரூ 10 ஆயிரத்திற்கு மட்டும் இவற்றை ஏலம் விட்டு மோசடியில் ஈடுபட்டதாகவும், பழைய பில்களை வைத்து மோசடி நடந்துள்ளதாகவும் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி கோதண்டபாணி, ராமச்சந்திரன், நாகராஜன், நடராஜன் என்ற கண்ணன், முருகநாதன், துரைசாமி, ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதியபட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் ராமச்சந்திரன், நடராஜன், ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகிய நால்வரும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்து போயினர்.

இதனை தொடர்ந்து எஞ்சிய 4 பேர் மீது நடந்து வந்த இந்த வழக்கில் 34 ஆண்டுகளுக்கு பின் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழக அதிகாரி கோதண்டபாணிக்கு அரசு ஊழியர் நம்பிக்கை மோசடி பிரிவில் 4 ஆண்டு வீதம் 47 பஸ்களுக்கு 188 ஆண்டு சிறை தண்டனையும், போலி ஆவணங்கள் உருவாக்குதல் பிரிவின் கீழ் 188 ஆண்டு சிறை தண்டனையும், திருடப்பட்ட சொத்து பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3.32 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 82 வயதாகும் கோதண்டபாணிக்கு மொத்தம் 383 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும், வயதை கருத்தில் கொண்டு ஏக காலத்தில் இதனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டதால் 7 ஆண்டுகள் மட்டும் சிறை தண்டனை அனுபவிப்பார் என்றும், மற்ற மூவரையும் விடுதலை செய்தும் நீதிபதி தீர்பளித்தார்

SCROLL FOR NEXT