தேசம்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: அரசு உடனடியாக செய்ய வேண்டியது இது தான்!

காமதேனு

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் கவுன்டர்களைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் என அனைத்துப் பயனர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மின் வாரிய அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என அரசு அறிவித்தது.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக சிறப்பு கவுன்டர்கள் நேற்று முன்தினம் அமைக்கப்பட்டுள்ளனள. இந்த முகாம் டிச. 31-ம் தேதி வரை நடைபெறும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பல இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்களில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 26 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பால் அன்றாடம் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால், கூடுதல் கவுன்டர்கள் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்," சில இடங்களில் ஒரே ஒரு கவுன்டர் இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க தாமதமாகிறது. இதனால் நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு கூடுதல் கவுன்டர்கள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் இணைப்பதற்கான சர்வரிலும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்சினைக.ள மீதும் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT