நிலநடுக்கம்
நிலநடுக்கம் நேபாளத்தில் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் - டெல்லியையும் அச்சமூட்டியது நிலஅதிர்வு
தேசம்

நேபாளத்தில் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் - டெல்லியையும் அச்சமூட்டியது நிலஅதிர்வு

காமதேனு

நேபாளத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், டெல்லி-என்சிஆர் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

நேபாளத்தின் ஜும்லாவில் இருந்து 69 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக ஜனவரி 24ம் தேதி நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில், நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று டோட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். டெல்லி-என்சிஆர் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

SCROLL FOR NEXT