தேசம்

தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க : சிறுத்தை நடமாட்டத்தால் எச்சரிக்கை விடும் வனச்சரகர்

காமதேனு

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என குன்னூர் வனச்சரகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அம்பிகாபுரம் காளியம்மன் கோயில் அருகே முருகன் வீட்டில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் சிறுத்தை, கரடி ஆகியவை உணவு தேடி ஊருக்குள் வந்த காட்சி கேமிராவில் பாதிவாகியிருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஊருக்குள் சிறுத்தை வந்த காட்சியும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடியிருப்பு பகுதியில் சிறுத்தை மீண்டும் உலா வந்ததால் அம்பிகாபுரம் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக வந்த சிறுத்தை முருகனின் பங்களாவின் உள் பகுதியில் உலா வரும் காட்சி அதில் பதிவாகியிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என குன்னூர் வனச்சரகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT