பாலசுந்தரம்
பாலசுந்தரம்  விவகாரத்து கடிதம் பெற்றுத்தர 5 ஆயிரம் லஞ்சம் : கையும், களவுமாக சிக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர்
தேசம்

விவகாரத்து கடிதம் பெற்றுத்தர 5 ஆயிரம் லஞ்சம் : கையும், களவுமாக சிக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர்

காமதேனு

கணவன், மனைவி விவாகரத்து குறித்த விவகாரம் தொடர்பாக  5000 ரூபாய் லஞ்சம் பெற்ற  சிறப்பு உதவி ஆய்வாளர்  லஞ்ச ஒழிப்புத் துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள  புலியூரைச் சேர்ந்த ஐயப்பனுக்கும் அவரது மனைவி ரஞ்சனிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழுகின்றனர். இந்த நிலையில் தனது மனைவி ரஞ்சனியிடம் இருந்து விவாகரத்து கடிதம் பெற்றுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐயப்பன் மனு அளித்தார்.  இந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு  நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு நெய்வேலி துணை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதையடுத்து  ஐயப்பனிடம் விசாரணை நடத்திய குள்ளஞ்சாவடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுந்தரம், வழக்கு சம்பந்தமாக அவரது மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர தனக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். 

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஐயப்பன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் படி அவர்கள் அளித்த ரசாயன பொடி தடவிய 5 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்று நேற்று இரவு பாலசுந்தரத்திடம் ஐயப்பன் அளித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், பாலசுந்தரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த ஷ்யாம்சுந்தர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரவுடி ஒருவரை வழக்கில் சேர்க்காமல் இருப்பதற்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது லஞ்ச  ஒழிப்பு போலீஸ்  கைது செய்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT