பாறை இடுக்கில் சிக்கி, மீட்கப்பட்ட கேரள இளைஞர்
பாறை இடுக்கில் சிக்கி, மீட்கப்பட்ட கேரள இளைஞர் 
தேசம்

இளைஞரை மீட்க ரூ.75 லட்சம் செலவழித்த கேரளா அரசு!

காமதேனு

கேரளாவில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு கேரள அரசு 75 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

கேரளா மாநலிம், பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 7ம் தேதி தனது நண்பர்களுடன் மலை ஏறும்போது, கால் தவறி கீழே விழுந்தார். அப்போது, செங்குத்தான பாறை ஒன்றின் இடுக்கில் சிக்கினார் பாபு. பின்னர் 48 மணி போராட்டத்திற்கு பிறகு ராணுவத்தினர் பாபுவை பத்திரமாக மீட்டனர்.

இந்த மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களுக்கு வாடகை மட்டுமே 50 லட்சம் ரூபாய் செலவாயிருப்பதும், பணிக்குழுக்களுக்கு 15 லட்சம் ரூபாய் என்று இதர செலவு கணக்குகள் கேரள கருவூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT