தேசம்

'கேரளா வரலாறு காணாத நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது' - நிதியமைச்சர் அதிர்ச்சி தகவல்

காமதேனு

கேரளா முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியில் தத்தளித்து வருவதாக அம்மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஒரு கேள்விக்கு பதிலளித்த பாலகோபால், “மாநிலம் வரலாறு காணாத நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது உண்மைதான். இருப்பினும் நெருக்கடிக்கான காரணங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. அதுதான் உண்மை. கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை மானியத்தில் (மத்திய அரசு மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டது) ரூ.6716 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்கள், கோவிட்-19 தொற்று, மத்திய அரசின் தவறான கொள்கைகள், அதிக சிந்தனையின்றி ஜிஎஸ்டியை அமல்படுத்தியது, ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் தாமதம் மற்றும் மத்திய அரசு மாநிலத்தின் கடன் வரம்பை குறைத்தது போன்ற காரணங்களால் மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

வரி வசூலை வலுப்படுத்தி, தேவையற்ற செலவினங்களைத் தவிர்த்து, அதை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நெருக்கடியைச் சமாளிக்க இடதுசாரி அரசாங்கம் இடதுசாரி அரசாங்கம் ‘தெளிவான வரைபடம்’ உள்ளது” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT