முதல்வர் பசவராஜ்
முதல்வர் பசவராஜ் twitter
தேசம்

கர்நாடகாவில் வார இறுதி லாக்டவுன் ரத்து; பள்ளிகள் திறப்பு!

காமதேனு

கர்நாடகாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுவரை அமலில் இருந்த வாராந்திர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 7ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டு வாரம் முடிந்த நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் பசவராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் பின்னர் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இதுவரை அமலில் இருந்த வாராந்திர ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வது என்று அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், தற்போது அமலில் இருக்கும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு வழக்கம் போல் அமலில் இருக்கும்.

இதேபோல், பெங்களூரு நகரில் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் வரும் 29ம் தேதி (சனிக்கிழமை) வரை பள்ளிக்கூடங்கள் மூடியிருக்கும். ஆனால், மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல் இயங்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT