கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா
கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா  மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கலாஷேத்ரா நிறுவனத்தை விமர்சிக்கும் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்!
தேசம்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கலாஷேத்ரா நிறுவனத்தை விமர்சிக்கும் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்!

காமதேனு

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா அறக்கட்டளையின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்து கொண்டுள்ளதாக பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பவுண்டேஷன் மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இக்கல்லூரியின் முன்னாள் பெண் இயக்குநர் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், கலாஷேத்ரா கல்லூரியின் தற்போதைய இயக்குநர் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு தொடர்பாக மாணவிகள் பலரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி வந்த நிலையில் தகவலறிந்து கலாஷேத்ரா நிர்வாகம், பாலியல் தொந்தரவுகளை விசாரிக்கும் கமிட்டியிடம் விசாரணை நடத்துமாறு கேட்டு கொண்டதன் பேரில் அக்கமிட்டி விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரம் கசிந்ததால் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தது. மேலும் விசாரணை திருப்திகரமாக இல்லையென்றால் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி உத்தரவின் பெயரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா கலாஷேத்ரா நிறுவனத்தின் தலைவர் ராமதுரைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா அறக்கட்டளையின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
மாணவர்கள் மீது அக்கறையும் கருணையும் இருந்தால் மட்டுமே எந்தவொரு விசாரணையும் பயனுள்ளதாக இருக்கும். கலை தாகத்தோடு பலரும் இங்கு வருகிறார்கள். பலரும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மேலும் கலாஷேத்ரா மீது மதிப்பை வைத்துள்ள எல்லோரும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். மாணவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘’ என குறிப்பிட்டுள்ளார்.

டி.எம்.கிருஷ்ணா கடிதம்
SCROLL FOR NEXT