பினராயி விஜயன்
பினராயி விஜயன் 
தேசம்

முதல்வர் வரும் நேரம் இது; மகளுக்கு அவசரமாக மருந்து வாங்கச்சென்ற தந்தை தடுத்து நிறுத்தம்: மனித உரிமை ஆணையம் காட்டிய அதிரடி

காமதேனு

கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் வருகிறார் என்பதால் சாலையில் காவலர்கள் பொதுமக்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் தன் சிறுகுழந்தைக்கு மருந்து வாங்கமுடியாமல் தந்தை ஒருவர் தவித்தார். இதனைத் தொடர்ந்து தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது மனித உரிமை ஆணையம். இது கேரளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாடு சென்ற தன் மனைவியை வழியனுப்பச் கொச்சின் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது முதல்வர் வரும் நேரம் இது என்னும் அறிவிப்போடு சாலையில் அந்த வழியாக மக்களைச் செல்லவிடாமல் எர்ணாக்குளம் சிட்டி போலீஸார் போக்குவரத்துத்துக்கு தடை ஏற்படுத்தி இருந்தனர். இதில் திருவஞ்சியூர் பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரின் காரும் சிக்கியது. சரண் தன் நான்கு வயது மகளுக்கு மருந்து ஒன்றை வாங்க கோட்டயம் மாவட்டத்தில் இருந்து எர்ணாக்குளம் வந்து இருந்தார்.

போக்குவரத்து நெரிசலில் நின்றபோதே சரண், அவசரமாக மருந்து தேவை. காரை ஓரமாக நிறுத்திவிட்டு மருந்து வாங்கிவிட்டு வந்துவிடுகிறேன் எனக் கூறினார். ஆனால் போலீஸார் சம்மதிக்கவில்லை. அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு, அவர் காரை ஒதுக்க முயன்ற மருந்துக் கடைக்காரரையும் திட்டினார்களாம். இதுகுறித்து சரண் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் புகார் அனுப்பினார். இதுதொடர்பாக சமூகவலைதளங்களிலும் விவாதம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கேரள மாநில மனித உரிமை ஆணையம் இதுதொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும், நான்கு நாள்களுக்குள் இதுகுறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் எர்ணாக்குளம் எஸ்.பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT