இஸ்ரேலிய தூதர் நாவோர் கிலோன்  
தேசம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படுவோம்... இந்தியா ஆதரவால் இஸ்ரேல் நன்றி

காமதேனு

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதோடு, அந்நாட்டிற்குள்ளும் ஊடுருவி பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, ஹமாஸ் படையினரை குறி வைத்து இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இஸ்ரேல் மக்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த போர் நடத்தப்படுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் ஆதரவுக்கு, இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் நாவோர் கிலோன் நன்றி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விடுமுறை தினத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினரின் செயல், கோழைத்தனமானது என கடுமையாக அவர் விமர்சித்துள்ளார்.

SCROLL FOR NEXT