தேசம்

`அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும்'- யுஜிசி அதிரடி

காமதேனு

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள், தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறி போராட்டம் நடத்தினர். இதனிடையே, தனது வீடியோவை மட்டுமே தனது காதலனுக்கு அனுப்பியதாக சம்பந்தப்பட்ட மாணவி அளித்த தகவலின் பேரில், இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த அவரது காதலன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் என்றும் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றும் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகிங்கில் ஈடுபடமாட்டேன் என ஒவ்வொரு மாணவரும், பெற்றோர்களும் www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் யுஜிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT