தேசம்

`முன்னறிவிப்பின்றி இந்தியர்கள் எல்லைக்கு செல்ல வேண்டாம்'

காமதேனு

``உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எந்த முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்'' என இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பாதுகாப்பு கருதி அங்குள்ள மெட்ரோ ரயில் சுரங்கத்தில் இந்தியர்கள், மாணவர்கள், உள்நாட்டை சேர்ந்தவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று மாணவர்கள் இந்தியாவை வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.

இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகள் வழியே மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும் பணி நடைபெறும் நிலையில் இந்திய தூதரம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எந்த முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் உக்ரைனின் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இருப்பது எல்லையை நோக்கி செல்வதைவிட பாதுகாப்பானது என்றும் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற அண்டை நாடுகளுடன் தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தூதரக அதிகாரிகள், தூதரக அவசர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருவதால் மாணவர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SCROLL FOR NEXT