உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 
தேசம்

அடுத்தடுத்து ஆட்டமிழந்த முன்னணி வீரர்கள்; கைகொடுத்த ரஹானே: 296 ரன்களில் சுருண்டது இந்தியா!

காமதேனு

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி  நடைபெற்று வருகிறது . இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களில் சுருண்டது.

ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 121.3 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸ்சில் 469 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய அணி நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் ரோகித் சர்மா(15), கில்(13), புஜாரா(14), கோலி(14) ஜடேஜா(48) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அஜிங்க்யா ரஹானே நிலைத்து ஆடி 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடன் இருந்தபோது 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களுடன் நேற்றைய ஆட்டம் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் பரத் 5 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் நிதனமாக ஆடி இந்திய அணியை ஓரளவு கௌரவமான ஸ்கோரை நோக்கி நகர்த்தினார்கள். ரஹானே 89 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் சுருண்டனர்.

கடைசி நேரத்தில் நம்பிக்கையளித்த ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 69.4 ஓவர்களை எதிர்கொண்டு 296 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் மற்றும் ஸ்டார்க், போலாண்டு, கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.

SCROLL FOR NEXT