தேசம்

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய ஆந்திர மரத்தேர்: புத்தர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்

காமதேனு

ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய தேருடன் கூடிய சிலையை மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சமடம் அந்தோணியார்புரம் கடற்பகுதி உள்ளது. இங்கு மீனவர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை அங்குள்ள கடலில் மரத்தேர் ஒன்று மிதந்து வந்து கரை ஒதுங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். அதில், வெண்கல புத்தர் சிலையை பக்தர் ஒருவர் வணங்கும் நிலையில் உள்ள காட்சி இருந்தது. மேலும் சில சிறு உருவ சிலைகள் இருந்ததை பார்த்தனர்.

ஆந்திர மொழியால் எழுதிய பேனர் இருந்தது. இச்சிலையை பெண்களும், சிறுவர்களும் வணங்கி வருகின்றனர். ஆந்திர மாநில கடற்கரை பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மரத்தேர் காற்றின் வேகத்தில் இழுத்து வரப்பட்டு இங்கு கரை ஒதுங்கியிருக்கலாம். அல்லது, மார்கழி மாத பஜனைக்கான ஆந்திர மாநிலத்தில் இருந்து தேர் இழுத்து வரும் பக்தர்கள் யாரேனும் இங்கு விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT