தேசம்

மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்: பாம்புகளால் நோயாளிகள் அதிர்ச்சி

காமதேனு

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஜாம்ஷெட்பூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தீக்காய சிகிச்சைப் பிரிவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜாம்ஷெட்பூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மருத்துவமனை வார்டில் இருந்து வாளிகளைப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றினர்.

இதுகுறித்து நோயாளி ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையில் முறையான வடிகால் வசதிகள் இருக்க வேண்டும் . மருத்துவமனையில் இருந்து தண்ணீர் விரைவில் அகற்றப்படும் என்று நம்புகிறேன். இல்லையெனில் அது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். தீக்காய வார்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் வாய்க்கால் வழியே பாம்புகள் உள்ளே புகுந்துள்ளதால் அச்சமாக உள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT