தேசம்

கனமழை: கேரளத்தில் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

காமதேனு

கேரளத்தில் கனமழையின் காரணமாக 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அம்மாநில மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வரும் 27-ம் தேதிதான் தொடங்குகிறது. ஆனால் இந்த ஆண்டு, அதற்கும் முன்பாகவே மழை தொடங்கி வெளுத்து வாங்கிவருகிறது. கனமழையின் காரணமாக கொல்லம், பத்தனம் திட்டா, திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழையை எதிர்கொள்வது தொடர்பாக, கேரளத் தலைமைச் செயலாளர் ஜாய் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் தேவைப்படும் பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதேபோல் 24 மணிநேரமும் விழிப்போடு இருக்கும்படியும், ஆறு மாவட்ட வருவாய் துறையினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையினால் ஏற்படும் அவசர நிலைகுறித்து அறிவிக்க ஏற்கெனவே மாநில கட்டுப்பாட்டு அறை உள்ளது. இதேபோல் மழை தொடர்பில் ஆரஞ்சு அலெர்ட் பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களிலும், மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மீனவர்கள் 16-ம் தேதிவரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT