சென்னை நிகழ்ச்சியில் அமைச்சர் மா
சுப்ரமணியன்
சென்னை நிகழ்ச்சியில் அமைச்சர் மா சுப்ரமணியன் 
தேசம்

`50 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது; 6 மாவட்டத்தில் விரைவில் மருத்துவக் கல்லூரிகள்'- அமைச்சர் தகவல்

காமதேனு

தென்காசி, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி உட்பட புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள ரேடியோ கதிர் இயக்கவியல் துறை தற்போது மேலும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இதற்கான நிகழ்வில் கலந்து கொண்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

"தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியாவை சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

இம்மாதம் இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம் இனி ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் என அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT