ஹனுமன் சாலிசா வீடியோ முகப்பு
ஹனுமன் சாலிசா வீடியோ முகப்பு 
தேசம்

300 கோடி பார்வைகளைக் கடந்த இந்தியாவின் முதல் யூடியூப் வீடியோ!

காமதேனு

‘ஹனுமன் சாலிசா’ என்ற வீடியோ இந்தியாவின் யூடியூப் வீடியோக்கள் மத்தியில், முதல் 300 கோடிகளை பார்வைகளை பெற்ற வீடியோ என்ற சாதனையை படைத்திருக்கிறது.

யூடியூப் வீடியோக்களின் வெற்றியும் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும், அந்த வீடியோவுக்கு கிடைக்கும் பார்வைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதனால் அதிக பார்வைகளைப் பெறும் யூடியூப் வீடியோக்கள் சாதனைக்கான அங்கீகாரத்தையும் பெற்று வருகின்றன.

ஹனுமனின் ஆசியை பெறுவதற்காக வடமொழியில் துளசிதாசர் உருவாக்கியது ஹனுமன் சாலிசா. இதனை ஹரிஹரன் பாட குல்ஷன் குமார் தோன்றும், ’டி-சீரிஸ்’ நிறுவனத்தின் 9.41 நிமிடத்துக்கு நீளும் வீடியோ, 2021ல் யூடியூபில் வலையேற்றம் செய்யப்பட்டது. உலகமெங்கும் பக்தர்களால் அதிகம் தரிசிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த இந்திய வீடியோ புதிய சாதனை படைத்திருக்கிறது.

அதன்படி, இந்தியாவின் முதல் 300 கோடி பார்வைகளை கடந்த முதல் யூடியூப் வீடியோ என்ற சாதனைக்கு ஹனுமன் சாலிசா உரித்தாகிறது. மேலும் இந்த வீடியோ 12 மில்லியன் லைக்ஸ் பெற்றும் உள்ளது. ’டி-சீரிஸ்’ யூடியூப் சானல் 238 மில்லியன் சந்தாதாரர்கள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT