ரஜினிகாந்த் உடன் மருத்துவர்கள்
ரஜினிகாந்த் உடன் மருத்துவர்கள் 
தேசம்

அரசு மருத்துவமனையில் இதுவே முதல் முறை: மூளைப் பகுதியில் இருந்த கட்டியை மூக்கு வழியாக அகற்றி சாதித்த மருத்துவர்கள்!

காமதேனு

நோயாளி ஒருவரின் மூளைப் பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக வெளிப்புற காயமின்றி அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் (38) என்பவருக்கு கடந்த ஒரு வருட காலமாக கடுமையான தலைவலி இருந்து வந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தலைவலி தீராததால் ஒரு கட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையின் பிட்யூட்டரி பகுதியில் கட்டி ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.

அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று முடிவு செய்த மருத்துவர்கள் அதற்காக புதிய தொழில்நுட்ப முறையை கையாள திட்டமிட்டனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ரஜினிகாந்த்தின் மூக்கின் வழியாகவே மூளையின் பிட்டியூட்டரி பகுதியில் இருந்த கட்டியை வெளிப்புற காயமின்றி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர். அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறை.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ரஜினிகாந்த் பூரண குணமடைந்து மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து இன்று வீடு திரும்பியுள்ளார். இதனை இன்று புறவெளியில் பகிர்ந்து கொண்டுள்ள அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் இதுகுறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT