தேசம்

60 மாத்திரைகளைச் சாப்பிட்டு அரசு பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி: அதீத பணிச்சுமை காரணமா?

காமதேனு

தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் அதிக மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழி வர்மா. இவரது மகளான பேபி லில்லி(28) அரசு மருத்துவராக உள்ளார். இன்னும் திருமணம் ஆகாத பேபி லில்லி, கடந்த ஜனவரி 3-ம் தேதிமுதல் நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிசெய்து வருகிறார். இவர் சேலத்தில் இருந்து தினமும் காரில் பணிக்கு செல்வார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாலையில் பேபி லில்லி பணியில் இருந்தபோது திடீரென மயங்கினார். வாந்தியும் இருந்தது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போது 60க்கும் அதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இப்போது பேபி லில்லிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதீத பணிச்சுமையில் தான் தவிப்பதாக பேபி லில்லி தொடர்ந்து புலம்பி வந்ததாகக் கூறப்படும் நிலையில் இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT