அரும்பாக்கம் காவல் நிலையம்
அரும்பாக்கம் காவல் நிலையம் நகை வியாபாரியை திசைத்திருப்பி ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.7 லட்சம் வழிப்பறி
தேசம்

நகை வியாபாரி டூவீலரில் மோதி ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.7 லட்சம் வழிப்பறி

காமதேனு

நகை வியாபாரியின்  வாகனத்தை விபத்து ஏற்படுத்தி 25 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கநகை மற்றும் 7 லட்சம் ரூபாய் ரொக்கத்தை வழிப்பறி செய்தவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வருகிறார். அத்துடன் தங்கநகைகள் செய்து நகைக்கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு புதிய டிசைன் நகைகளைக் கொடுப்பதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் நேற்று சென்றார். இதன் பின் இரவு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படிருந்த தனது வாகனத்தை எடுத்துள்ளார்.

அப்போது 400 கிராம் தங்கநகை மற்றும் 7 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பையில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.

அவர்கள் மோதியதில் நிலைகுலைந்து தரையில் விழுந்த ராஜேஷ் சுதாரித்து எழுவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது பையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் திருடன். திருடன் என கூச்சலிட்டுள்ளார். அதனை யாரும் பொருட்படுத்தாத நிலையில் அந்த மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர்.

 உடனடியாக நகை மற்றும் பணத்தைப் பறிகொடுத்த ராஜேஷ், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT