தங்கம்
தங்கம்  ஒரு சவரன் தங்கத்தின் விலை 46 ஆயிரத்தை கடந்தது!- அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்
தேசம்

ஒரு சவரன் தங்கத்தின் விலை 46 ஆயிரத்தை கடந்தது!- அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்

காமதேனு, Spandana

ஆபரண தங்கத்தின் விலை இன்று இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சமாக  ரூ. 46,000-ஐ தொட்டுள்ளது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில் இந்த வாரம் ஏறுமுகத்தில் இருக்கிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.91 அதிகரித்து ஒரு தங்கத்தின் விலை 45,648 ரூபாயாக இருந்தது.  இந்தநிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. நேற்று 5706 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 44 ரூபாய் உயர்ந்து  5750 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.80 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,800 எனவும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக 44,000 முதல் 45,000  வரை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த தங்கம் விலை,  இரண்டு நாட்களில் மட்டும் திடீரென ஆயிரம் ரூபாய் உயர்ந்து 46 ஆயிரம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. 

இதனால் நடுத்தர மக்கள் தங்களுடைய தங்கக் கனவு தகர்ந்துபோன வருத்தத்தில் இருக்கின்றனர்.

SCROLL FOR NEXT