தேசம்

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய மாணவி: ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு நடந்த துயரம்

காமதேனு

ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி நடைமேடையில் விழுந்த மாணவி ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரயில் பயணம் மேற்கொள்ள வருபவர்கள் பல்வேறு விபத்துகளை சந்தித்து வருகின்றனர். சிலர் ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதேபோல் ரயிலில் இருந்து இறங்கும்போதும் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ரயிலிலிருந்து சசிகலா என்ற மாணவி இறங்கி இருக்கிறார். அப்போது கால் தவறி மாணவி சசிகலா ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த ரயில்வே காவல்துறை விரைந்து வந்து மாணவியை மீட்க போராடினர். சுமார் ஒன்றரை மணி நேரமாக போராடி மாணவி மீட்கப்பட்டார்.

இதையடுத்து, மாணவி சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மாணவியின் உள்உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரயிலில் இறங்கும்போது தவறி விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் விசாகப்பட்டினம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT