தேசம்

கட்சிகளின் இலவச அறிவிப்பு : கைவிரித்த தேர்தல் ஆணையம்

காமதேனு

" இலவசங்கள் வழங்குவது என்பது சம்பந்தப்பட்ட கட்சியின் கொள்கை முடிவு. இவற்றை முறைப்படுத்த முடியாது" என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இலவசத் திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில்,” தேர்தலுக்கு முன்போ, பின்போ இலவசங்கள் வழங்குவது சம்பந்தப்பட்ட கட்சியின் கொள்கை முடிவாகும். இலவசத் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கைகள், முடிவுகளைத் தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது. இலவசங்களை ஏற்பதும், நிராகரிப்பதும் வாக்காளர்களின் முடிவு” என மனுவில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT