காதல் மன்னன் ஜான்சன்
காதல் மன்னன் ஜான்சன் 
தேசம்

திருமணமாகாத பெண்களுடன் பழகி நெருக்கம்; ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் மோசடி: ஐடி பெண்ணால் சிக்கிய காதல் மன்னன்

காமதேனு

சமூக வலைதளங்களில் பணக்காரன் போல் புகைப்படம் பதிவிட்டு திருமணமாகாத பெண்களை குறிவைத்து காதல் வலையில் விழவைத்து மோசடியில் ஈடுபட்ட காதல் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். வலையில் சிக்கும் பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சிம்ரன் (பெயர்மாற்றம்). 35 வயதான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சிம்ரனுக்கு, கடந்த 2017?ம் ஆண்டு முகநூலில் ஜான்சன் அருள்மாறன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜான்சன் அருள்மாறன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பணக்காரர் போல புகைப்படங்களை பதிவிட்டு வந்ததால், சிம்ரனுக்கு அவருடன் காதல் ஏற்பட்டு, நாளடைவில் ஜான்சன் சிம்ரனை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததால் நெருங்கி பழகி வந்துள்ளார்.

பின்னர் ஜான்சன் சொந்த தொழில் செய்து வருவதாகவும், தொழிலை பெருக்க பணம் தேவைப்படுவதாக கூறி பல தவணைகளில் சிம்ரனிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 19 கிராம் தங்க நகையை பெற்றுள்ளார். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜான்சன் வீட்டிற்கு சிம்ரன் சென்ற போது, அந்த வீட்டில் வேறொரு பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தியபோது அந்த பெண்ணையும் ஜான்சன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, அவரது வீட்டை தன் வீடு என காண்பித்து ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிம்ரன், கொடுத்த 10 லட்சம் பணம் மற்றும் 19 கிராம் தங்க நகையை ஜான்சனிடம் திருப்பி கேட்டதற்கு இருவரும் நெருக்கமான புகைப்படங்களை காண்பித்து ஆபாசமாக பேசியதுடன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிம்ரன் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சேர்ந்த ஜான்சன் அருள்மாறன்(38) என்பவனை கைது செய்தனர்.

பின்னர் ஜான்சனிடம் நடத்திய விசாரணையில், 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வேலை செய்யாமல் சுற்றி வருவதும், சமூக வலைதளங்களில் விதவிதமான போஸ்களில் போட்டோக்களை அப்லோடு செய்வதும், குறிப்பாக சமூக வலைதளங்களில் திருமணமாகாத அதிக வயதுடைய பெண்களை குறிவைத்து தனது காதல் வலையில் விழ வைப்பதும், அதிலும் அதிக சம்பளம் வாங்கும் பெண்களை மட்டுமே காதல் வலையில் விழ வைத்து ஜான்சன் மோசடியில் ஈடுபட்டதும், காதல் வலையில் விழுந்த பெண்களிடம் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்து கொண்டு பின்னர் கழற்றி விடுவதும் விசாரணையில் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் புகார் அளிக்க சென்றால் அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்து மிரட்டியதும் இதேபோல் 10க்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்களை ஜான்சன் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT