கரசங்கால்
கரசங்கால் கட்டாயப்படுத்துறாங்க ஸார்: ஒரு ஃபோன் காலால் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி
தேசம்

கட்டாயப்படுத்துறாங்க ஸார்: ஒரு போன் காலால் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி

காமதேனு

கட்டாயம் திருமணம் செய்து வைக்க நினைத்த, தந்தைக்கு எதிராக குழந்தைகள் நல பாதுகாப்புத்துறையிடம் புகார் அளித்துத் தடுத்து நிறுத்திய 16 வயது சிறுமியை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த, கரசங்கால் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு 16 வயது ஒரு மகள் உள்ளார். இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால் வீட்டில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் சிறுமிக்குத் தெரியாமல் அதிக வயதுடையவருக்குத் திருமணம் செய்து வைக்க சிறுமியின் தந்தை திட்டமிட்டு திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி தற்போது தனக்குத் திருமணம் வேண்டாம் என வீட்டாரிடம் முறையிட்டுள்ளார். அதனைக் கண்டுக்கொள்ளாத வீட்டார் திருமண வேலைகளில் மும்முரமாக இருந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனது நிலைமையை விளக்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டுக் குழந்தைகள் நல பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மணிமங்கலம் போலீஸார், கரசங்கால் பகுதியில் வந்து ரகசியமாக நேற்று விசாரணை நடத்தினர்.

இதில் 16 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்வது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதனையடுத்து அந்தச் சிறுமியை மீட்டுக் காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் செயலை அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT