தேசம்

நடைபாதைப் பாலம் உடைந்து விழுந்தது: மகாராஷ்டிரத்தில் பயங்கர விபத்து

காமதேனு

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில், ரயில்வே நடைபாதைப் பாலம் இடிந்துவிழுந்ததில் பலர் காயமடைந்தனர்.

சந்திரபூரின் பல்லார் ஷா ரயில்வே நிலையத்தின் நடைபாதைப் பாலம் 60 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. நடைமேடை எண் 1 மற்றும் 4-ஐ இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் பல ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் அந்தப் பாலத்தின் தகடுகள் திடீரென உடைந்து விழுந்தன. இதில் அந்தப் பாலம் வழியே நடந்துசென்றவர்கள் நிலைதடுமாறு கீழே தண்டவாளங்கள் மீது விழுந்தனர். இதில் 20 பேர் காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் வரவில்லை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. எனினும் 60 அடி உயரத்திலிருந்து விழுந்தவர்களின் நிலை என்ன எனும் அச்சம் எழுந்திருக்கிறது. இவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT