தேசம்

பள்ளிக்குள் நுழைந்த வெள்ளம்; ஆசிரியை நனையாமல் இருக்க சேர்களை அடுக்கிய மாணவர்கள்: அரசு எடுத்த அதிரடி

காமதேனு

மாணவர்கள் போட்ட பிளாஸ்டிக் சேர்களில் ஏறி நீரில் மூழ்கிய பள்ளிக்குள் ஆசிரியை செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் நேற்று தொடர் மழை பெய்தது. இதனால், அப்பகுதியில் உள்ள பள்ளிக்குள் மழை நீர் புகுந்தது. இந்த நிலையில், பள்ளிக்கு ஆசிரியை வந்தார். ஆனால், பள்ளி வளாகத்தில் நீர் நிரம்பியிருந்ததால், அவர் உள்ளே வர முடியவில்லை. மாணவர்களை சேர்களைப் போடச் சொல்கிறார்.

இதன்படி மாணவர்கள் நீரில் இறங்கி ஒவ்வொரு சேராக போட அதில் ஏறி ஆசிரியை பள்ளிக்குள் வருகிறார். அவர் ஏறும் சேர் சாய்ந்து விடாமல் இருக்க மாணவர்கள் பிடித்துக் கொள்கின்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானாது. இதையடுத்து அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT