முற்றிலும் உருக்குலைந்த அரசு பேருந்து
முற்றிலும் உருக்குலைந்த அரசு பேருந்து 
தேசம்

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: லாரி மீது அசுர வேக அரசு பஸ் மோதி 5 பயணிகள் பலி

காமதேனு

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் ஐந்து பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். காலை 8 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகம் இல்லாததால் ஓட்டுநர் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்று கொண்டு இருந்த லாரியை கவனிக்காத ஓட்டுநரால் நிலை தடுமாறிய பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்தின் இடதுபுறம் முழுவதும் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதனால் இடதுபுறம் அமர்ந்திருந்த பெரும்பாலான பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மதுராந்தகம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT