மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்
மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் 
தேசம்

மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க 11 நாட்களுக்கு பின் அனுமதி!

காமதேனு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், வானம் மேக மூட்டதுடன் காணப்படுகிறது. காற்றின் வேகம் அதிகரிப்பால்  கடல் நீரோட்டம் அடிக்கடி மாறுபட்டது. மேலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதன் எதிரொலியாக, புயல் எச்சரிக்கை  முதலாம், மூன்றாம் எண் கூண்டுகள் ஏற்றப்பட்டன.

இந்நிலையில், காற்றின் வேகம் படிப்படியாக குறையத் துவங்கியதால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல மீன்வளத்துறை அனுமதித்துள்ளது. இதனை தொடர்ந்து, தென் பகுதி எனப்படும் மன்னார் வளைகுடா கடலில் மின்பிடிக்க செல்ல, மீனவர்களுக்கு நாளை (டிச.26) காலை அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

டிச.15-ம் தேதிக்கு பின் படகுகள் நாளை தொழிலுக்குச் செல்வதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீனவர்கள் பிடித்து வரும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட ஏற்றுமதி ரக மீன்களை  நியாயமான விலையில் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

SCROLL FOR NEXT