தேசம்

அதிகாலையில் நடமாடிய யானைக்கூட்டம்: அச்சத்தின் பிடியில் மக்கள்

காமதேனு

திண்டுக்கல் அருகே யானைகளின் நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணை மேற்பகுதியில் அடர்ந்த வனம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக யானைகள் நடமாடி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், யானைகள் வரிசையாக அணிவகுத்து செல்லும் காட்சி காமராஜர் அணை அருகே உள்ள காட்டேஜில் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமிராவில் இன்று அதிகாலை பதிவாகி உள்ளது.

இந்த யானைகள் அணையில் இருந்து இடம் பெயர்ந்து, அங்குள்ள வனப்பகுதியில் புகுந்திருக்கக்கூடும் என அப்பகுதி விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர். இதுகுறித்த தகலறிந்த கன்னிவாடி வனத்துறை அதிகாரிகள் யானைகளின் நடமாட்டத்தைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்த அச்சத்தைப் போக்க அங்குள்ள மரங்களில் கேமிரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், யானைகளின் நடமாட்டம் பொதுமக்களிடம் மேலும் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT