தேசம்

அசாமில் 3.1 ரிக்டர், மும்பை அருகே அரபிக்கடலில் 4.1 ரிக்டரில் நிலநடுக்கம் - மக்கள் பதற்றம்!

காமதேனு

அசாமின் மோரிகானில் நேற்று இரவு 11:38 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அசாமின் மோரிகான் பகுதியில் 10 கி.மீ ஆழத்திலும் லேட்: 26.24 & லாங்: 92.40 அளவிலும் 3.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நேற்று இரவு மும்பை அருகே அரபிக் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 9:52 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம்

நேற்று இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று தஜிகிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த மையம் வெளியிட்ட தகவல்களின்படி, நிலநடுக்கம் காலை 6:42 மணிக்கு (IST) ஏற்பட்டது. அதன் ஆழம் 80 கிலோமீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது. மேலும், 5.1 ரிக்டர் அளவில், லேட்: 37.24 & லாங்: 71.74, 80 கி.மீ ஆழத்தில் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை, உயிர்ச்சேதமோ, பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT