தேசம்

அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: புயலால் பொதுமக்களுக்கு சென்னை போலீஸ் அறிவுறுத்தல்

காமதேனு

'மேன்டூஸ்' புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் அத்தியாவசியமின்றி பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 270 கிலோமீட்டர் தொலைவில் 'மேன்டூஸ்' புயல் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரப்புயலாக உள்ள 'மேன்டூஸ்' சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. அத்துடன் பலத்த காற்றும் வீசி வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் கோட்டூர்புரம், அண்ணா பல்கலைக்கழம் உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனால் கோட்டூரில் மூன்றுக்கும் மேற்பட்ட கார்கள் மரங்கள் விழுந்து சேதமடைந்தன. சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அத்தியாவசியமின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT