தேசம்

தஞ்சையில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா: நவ.3 உள்ளூர் விடுமுறை

காமதேனு

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037- வது பிறந்தநாள் கொண்டாட்டமான  சதய விழாவினை முன்னிட்டு 3.11.22 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

கடல் கடந்தும்,  வடநாடு வரை சென்றும் பல போர்களை நடத்தி வெற்றிபெற்று சோழப் பேரரசை கட்டி எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நட்சத்திரம்  சதய விழாவாக அரசு விழாவாக கொண்டாடப் படுகிறது.  1037-வது சதய விழா  இந்த ஆண்டு சதய நட்சத்திர நாள்  நவம்பர் 3- ம் தேதியன்று வருகிறது. அன்றைய தினம் தஞ்சையில் சதய விழாவை  மிகச் சிறப்பாக கொண்டாட விரிவான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 
மங்கல இசையுடன் தொடங்கி  தேவாரப் பாடல்கள் ஓதுதல்,  திருமுறை வீதியுலா, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், சிறப்பு சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனையடுத்து சதய விழாவில் மாணவர்கள், பொதுமக்கள்,  அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில் தஞ்சைக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
நவ 3-ம் தேதியன்று  பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT