உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை 
தேசம்

கோயிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது: தரிசனத்தில் பாகுபாடு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

காமதேனு

கோயிலில் சுவாமி தரிசனத்தில் பாகுபாடு கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தென்காசி அருகே மாதரசி அம்மன் கோயிலில் வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் தடுக்கின்றனர். உயர் சாதியினர் வழிபட விடாமல் தடுப்பதாகவும், குலதெய்வ பூஜை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை, சாதிய பாகுபாடு இல்லாமல் கோயிலில் அனைவரையும் சமமாக கருத வேண்டும். அமைதியான முறையில் அனைவரும் வழிபடு செய்கின்றனரா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளது.

கோயிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பதோ கூடாது. அனைத்து பக்தர்களும் சமமாக மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். யாரும் சிறப்பு மரியாதை வழங்க வற்புறுத்தக்கக்கூடாது என சிங்கம்புணரி அருகே கோயில் தை பொங்கல் விழாவில் ஒருவருக்கு மட்டும் அளிக்கப்படும் மரியாதை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த மாதம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT