திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்
திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்  நெல்லை திமுக மாநகரச் செயலாளர் கமிஷன் கேட்டாரா?- வைரல் வீடியோவுக்கு வழக்கறிஞர் விளக்கம்
தேசம்

நெல்லை திமுக மாநகரச் செயலாளர் கமிஷன் கேட்டாரா?- வைரல் வீடியோவுக்கு வழக்கறிஞர் விளக்கம்

காமதேனு

ஊரக வளர்ச்சி முகமையின் கீழ்வரும் சாலைப்பணி உங்களுக்கு கிடைக்க சொல்கிறேன். பலருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்பதால், நடக்கும் பணிகளுக்கு 18 சதவீதம், அதற்கு ஜிஎஸ்டியும் கமிஷனாக கொடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பேசியதாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்தநிலையில் இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில் எதிர்புறம் இருப்பவர் தன் செல்போனில் வீடியோ கேமராவை ஆன்செய்து பாக்கெட்டில் போட்டு உள்ளார். நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பேசுவது போல் காட்சிகள் இருக்கும். அதில், “ஊரக வளர்ச்சி முகமை சாலைப்பணி உங்களுக்கு கிடைக்க சொல்கிறேன். எல்லாம் ஒகே ஆகிவிட்டால் 18 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும். அந்த 18 சதவீதத்திற்கு ஜிஎஸ்டியும் கொடுக்க வேண்டும். இதற்கு நெல்லை மாவட்டத்திற்கு ராஜகண்ணப்பன் தான் பொறுப்பு அமைச்சர். அவருக்கு அந்த 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதம் கொடுக்க வேண்டும். நெல்லை தொகுதியில் வேலை வேண்டும் என்றால் நீங்கள் எப்போதும் என்னை அணுகுங்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொருவர் மூலம் வாங்குவோம். ராதாபுரம் அப்பாவு அண்ணன், பாளையங்கோட்டை வகாப் எம்எல்ஏ பார்க்கிறார். நெல்லைக்கு ராஜகண்ணப்பன் தான் பொறுப்பு அமைச்சர். அமைச்சர் ஒகே சொன்னதும் கமிஷனைக் கொடுத்துவிடுங்கள்.

கமிஷனுக்கும் ஜிஎஸ்டி தொகை சேர்த்துதான் கொடுக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரத்தில் 18 சதவீதம், மதுரையும் அப்படித்தான். தூத்துக்குடியில் கமிஷன் 20 சதவீதத்திற்கும் அதிகம் ” என ஒப்பந்ததாரரிடம் பேசுவதுபோல் அந்த வீடியோ இருந்தது.

இந்தநிலையில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனின் வழக்கறிஞர் காந்திமதி நாதன் விடுத்துள்ள அறிக்கையில், “அந்த வீடியோவில் இருப்பது மாநகர செயலாளர் சுப்பிரமணியன் அல்ல. அது போலியாக உருவாக்கப்பட்டது, அமைச்சர் மற்றும் திமுக மாநகரச் செயலாளரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதை சிலர் போலியாக உருவாக்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT