தேசம்

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

காமதேனு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாகைக்கு கிழக்கே 570 கிலோ மீட்டரில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக நாளை (டிச.25) தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் (டிச.26) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT