இறப்பு
இறப்பு OWNER
தேசம்

தாய் மாமா இறப்புக்குச் சென்றவர் 17 நாள்களுக்குப் பின்பு சடலமாக மீட்பு: நடந்தது என்ன?

காமதேனு

திண்டுக்கல் மாவட்டத்தில் தன் தாய் மாமா இறப்புக்கு சென்ற வாலிபர் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் 17 நாள்களுக்குப் பின்பு அழுகிய நிலையில் சடலமாக வாலிபர் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகன் டென்சிங் குமார்(34). கேட்டரிங் முடித்துள்ள இவர், கேரளத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலைசெய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். டென்சிங் குமாரின் தாய் மாமா கடந்த 26-ம் தேதி உடல் நலமின்மையால் இறந்தார். இதற்காக தன் குடும்பத்தோடு வெள்ளோடு கிராமத்திற்கு வந்து, இறப்பு வீட்டில் கலந்து கொண்டார் டென்சிங். மாமா வீட்டில் இருந்து 27-ம் தேதி காலையில் வெளியே சென்ற டென்சிங் குமார் அதன் பின்பு வீடு திரும்பவில்லை.

டென்சிங் குமார் மாயமானது தொடர்பாக அவரது மனைவி பிரிஸ்கா தமிழரசி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அதேபகுதியில் பக்கவாட்டு சுவர் இல்லாத கிணறு ஒன்றில் டென்சிங் குமார் சடலமாக மீட்கப்பட்டார். அதேநேரம் அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவரது உடலை ஓலைப்பாயில் சுற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டென்சிங் குமார் பக்கசுவர் இல்லாத கிணற்றில் தடுமாறி விழுந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT